ETV Bharat / briefs

வரதட்சணை தராததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது!

சென்னை: வரதட்சனையாக பத்து லட்சம் ரூபாய் தராத கோவத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.

Husband arrested for posting nude photo on Facebook

author img

By

Published : Sep 18, 2020, 6:35 AM IST

சென்னை அயனாவரம் பழனியப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் துர்கா (28) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு 2010ஆம் ஆண்டு சார்லஸ் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு, 2015ஆம் ஆண்டு முதல் திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து அயனாவரம் பகுதியில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

விஜயபாரதி அடிக்கடி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு துர்காவை துன்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த துர்கா கடந்த ஜூலை மாதம் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போதும் விடாமல் தொலைபேசி மூலம் பணம் வேண்டும் என தொடர்ந்து துர்காவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், துர்காவின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த துர்கா, கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து துர்காவின் உறவினர் ஸ்ரீதரன் என்பவர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை தேடி வந்தனர்.

இதனிடையே, விஜயபாரதியை தொடர்புகொண்டு விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தபோது பலமுறை நான் வெளியூரில் உள்ளேன் எனத் தொடர்ந்து அவர் பொய் கூறி வந்துள்ளார்.

ஆனால், அவர் சென்னையில் இருப்பதை அறிந்த காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, பேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.