கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள கர்ஜகி கிராமத்தில் பிரம்மலிங்கேஸ்வரர் கண்காட்சி நடைபெற்றது. இதில், ஊரடங்கு உத்தரவையும் மீறி அக்கிராமத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், பொதுமக்கள் முகக்கவசங்கள் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக திரிந்தனர்.
இதேபோன்று, சென்ற மாதம் ராமநகர மாவட்டத்தில் ஒரு கிராம கண்காட்சிக்கு அனுமதி அளித்ததற்காக, அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஊரடங்கு காலத்தில், கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
ஆனால், இந்த கிராமத்தில் அரசு அலுவலர்கள் அனுமதி வழங்காதபோதும், விதிமுறைகளை மீறி கண்காட்சி நடைபெற்றது அரசு அலுவலர்கள், ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.