ETV Bharat / briefs

'வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது?' - Chennai High court order

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வருவதற்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High court order
Chennai High court order
author img

By

Published : Jul 3, 2020, 1:19 AM IST

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 2) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 47,000 பயணிகளில் 13,429 பேர் மட்டும் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். இன்னும் 27,956 பேரை அழைத்து வர வேண்டியுள்ளது. அதற்கு 158 விமானங்கள் இயக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால், விமானங்கள் தரையிறங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். கடந்த மே 15ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 79 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டுள்ளன எனவும்; மேலும் வெளிநாடுகளில் இந்திய குடிமக்கள், சாலைகளிலும், பூங்காக்களிலும் தான் தூங்குகின்றனர் என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், 'தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு. ஒரு நாளுக்கு ஏழு விமானங்கள் இயக்கப்படுகிறது. அதில் வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. அதேசமயம் கூடுதல் விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், 'வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும், அதன் மூலம் தீர்வு காண முடியும்' எனவும் கூறி அவகாசம் வழங்க கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை ஆறாம் தேதி ஒத்தி வைத்துள்ளனர். அன்றைய தினம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும், நேர்மறையான தீர்வை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.