சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை11) கிருமி நாசினி மூலம் அலுவலக வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.
அண்மையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை, உயர் அரசு அலுவலர்கள் அறைகள், செயலாளர்கள் அறைகள் மற்றும் பணிபுரியும் பல்வேறு துறை சார்ந்த அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் கழிவறைகள் மின்தூக்கி ஆகிய இடங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அலுவலகத்தையும் சுத்தம் செய்யும் போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் இன்றும் கிருமிநாசினி கொண்டு தலைமைச் செயலகம் சுத்தம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்!