ETV Bharat / briefs

பொதுத் தேர்வு முடிவுகள் : கிரேடு முறையில் அறிவிக்க வலியுறுத்திய ஆசிரியர் மீது வழக்கு ? - summon for teacher

சென்னை : கிரேடு முறையை வலியுறுத்திய கூட்டமைப்பின் செயலாளருக்கு வழங்கப்பட்ட 17பி குறிப்பாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள் : கிரேடு முறையில் அறிவிக்க வலியுறுத்திய ஆசிரியர் மீது வழக்கா ?

author img

By

Published : Jul 2, 2020, 3:24 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை காப்பாற்ற அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. நடைபெற இருந்த ஜூன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட பதினோராம் வகுப்பு தேர்வினை தமிழ்நாடு அரசு ரத்து செய்து ஆணையிட்டதை தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் என்பது அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் வைத்து தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுந்தது.

பல தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் பருவத் தேர்வுகளை நடத்தாமல் அவர்களே கேள்வித் தாள் தயாரித்தோ அல்லது பிற பயிற்சி நிறுவனங்கள் தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டோ நடத்துகிறார்கள் என்றும், ஒரு சில பள்ளிகள் இதை வியாபாரமாக்கி பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்களை வழங்குகிறார்கள் என்றும் அப்போது அனைத்து ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சிக்கலை தவிர்க்க மதிப்பெண் பட்டியலுக்கு (Mark Sheet) பதிலாக அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க இந்தாண்டு மட்டும் கிரேடு முறை (Grade system) வழங்கி சம நீதியை நிலைநாட்டவும், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் அருமையான ஆலோசனைகளை தன்னுடைய அறிக்கையின் மூலம் வழங்கினார். இதற்காக அவருக்கு குறிப்பாணை வழங்குவது, விளக்கம் கேட்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

மாணவர்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை பற்றி போதிக்கும் துறையில் இதுபோன்ற நெருக்கடிகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, அவருக்கு வழங்கப்பட்ட 17பி குறிப்பாணையை உடனடியாக திரும்பப்பெற தமிழ்நாடு அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்துகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.