திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில், செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் காவல்துறையினர் இணைந்து சட்டந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ. 50,000 மதிப்புள்ள 80 பாக்ஸ் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே புகையிலை பொருள்கள் கடத்தலுக்காக வைத்திருந்த தினேஷ்குமார், மதன்குமார், ராமகிருஷ்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.