தொழில்துறை அமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த், “அனைத்து விதமான நிதி சேவைகள் மக்களுக்கு சென்றடைவதில்லை” என அதிருப்தி தெரிவித்தார்.
காங்கிரஸால் வீழ்ந்த ஊதுபத்தி தொழிலுக்கு புத்துயிர் கொடுத்த பாஜக!
தொடர்ந்து அவர் கூறுகையில், “அனைத்து நிதி நிறுவனங்களும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் மக்களுக்கு பெரும் பயன் இருக்காது.
எனவே உள்ளூர் மொழிகளில் மக்களிடத்தில் நிதி தொடர்பான நடவடிக்கைகள் சென்றடை நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பண பரிவர்தனைகள் இந்தியாவில் அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இதனை மேலும் இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா?