ETV Bharat / briefs

சிறப்பு விமான பயணிகளால் களைகட்டியது விமான நிலையம்! - 8 special flight

சென்னை: சா்வதேச விமான நிலையம் ஒரே நாள் இரவில் எட்டு சிறப்பு தனி விமானங்களை இயக்கி, 1,226 பயணிகளை கையாண்டதால், இரண்டரை மாத இடைவெளிக்குப் பின்பு மீண்டும் விமான நிலையம் களைகட்டியது.

Chennai international airport
Chennai international airport
author img

By

Published : Jun 6, 2020, 3:07 PM IST

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் நேற்று(ஜூன் 6) மாலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரே நாளில் நான்கு சிறப்பு தனி விமானங்களில் 593 வெளி நாட்டவா்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி சென்றுள்ளனா். சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 210 பேரும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு 210 பேரும், தாய்லாந்தின் பேங்காக் நகருக்கு 108 பேரும், மலேசியாவின் கோலாலம்பூா் நகருக்கு 65 பேரும் புறப்பட்டு சென்றனா்.

இவா்களை அந்தந்த நாடுகளிலிருந்து காலியாக வந்த சிறப்பு விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த 593 வெளிநாட்டவா்களும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவா்கள். கடந்த இரண்டரை மாதங்களாக சா்வதேச விமான சேவைகள் இல்லாததால், தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து கொண்டிருந்தனா்.

அந்தந்த நாடுகளின் தூதரக அதிகாரிகள் இந்திய அரசுடன் பேசி சிறப்பு அனுமதி பெற்று, தற்போது தங்கள் நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா். அதைப்போல் வெளிநாடுகளில் இந்தியா்கள் 633 போ் நான்கு சிறப்பு தனி விமானங்களில் சென்னை அழைத்து கொண்டு வரப்பட்டனா்.

அவா்களில் தாய்லாந்து நாட்டிலிருந்து 160 போ், தமாமிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் 296 போ், கத்தாரிலிருந்து வந்த விமானத்தில் 177 போ் என, மொத்தம் 633 இந்தியா்கள் தாய் நாடு திரும்பியுள்ளனா். சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் அவா்களை வரவேற்றனா்.

அதன்பின்னர் அனைவருக்கும் சென்னை சா்வதேச விமானநிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர். மேலும் அவா்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்தனா். அவா்களில், இலவச தங்கும் இடங்கள் கேட்ட 264 போ் வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் தனியாா் கல்வி நிறுவனத்திற்கும், கட்டணம் செலுத்தி தங்குபவா்கள் 347 போ் சென்னை நகரில் உள்ள சொகுசு ஹோட்டல்களுக்கும் தனி பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 160 போ்களில், 22 போ்கள் கேரளா மாநிலம், பாலக்காட்டை சோ்ந்தவா்கள். அவா்கள் தங்கள் மாநிலத்திற்குச் சென்று தனிமைப்படுத்தி கொள்வதாக கூறியதால், கேரளா மாநில அரசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு தனி பஸ்சில் 22 பேரையும் கேரளாவிற்கு அனுப்பிவைத்தனா்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.