ETV Bharat / briefs

விதிகளை மீறி இயங்கிய தனியார் மருத்துவமனைக்குச் சீல்!

author img

By

Published : Jun 25, 2020, 1:39 PM IST

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் சளி, காய்ச்சலுக்கு விதியை மீறி சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனைக்கு வருவாய் கோட்டாட்சியர் , நகராட்சி ஆணையர் ஆகியோர் சீல்வைத்தனர்.

மருத்துவமனைக்கு சீல் வைத்த அலுவலர்கள்
for the violation of rules private hospital was sealed

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் இயங்கிவரும் மாருதி தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சளிக்கு மருத்துவம் அளித்து வந்த மருத்துவமனை இன்று மூடி சீல்வைக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது அவர்களின் முழு விவரம் அறிந்து முகவரியுடன் நகராட்சி, வருவாய் கோட்டாட்சியரிடம் முறையாகத் தெரிவிக்க வேண்டும். எந்தவித மருத்துவச் சிகிச்சையும் அளிக்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தனர்.

அதனை மீறி இந்த மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்ததால் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லக்ஷ்மி பிரியா, நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தி மருத்துவமனைக்குச் சீல்வைத்தனர்.

பலமுறை எச்சரித்தும் இதுபோல நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு எனவும் மருத்துவமனைக்குச் சீல்வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.