ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப்பூ பிரதான தொழிலாக உள்ளது. மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்படும் மல்லிகைப்பூக்கள் தற்போது கரோனாவால் விற்பனை குறைந்து காணப்படுகிறது.
சத்தியமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லைப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய தேவையில்லாத காரணத்தால் பூக்களின் விலை கிலோ 150 ரூபாயாக குறைந்தது.
இந்நிலையில் நாளை (ஜூலை31) ஆடி வெள்ளி என்பதால் சத்தியமங்கலத்தில் இருந்து 5 டன் பூக்கள் மைசூரு, பெங்களுரு கொண்டுசெல்லப்பட்டது.
இதனால், பூக்களை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளிடையே போட்டி நிலவியுள்ளது. மேலும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று கிலோ 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய பூக்களின் விலை ஒரு கிலோ மல்லிகை 1200 ரூபாய், முல்லை 320 ரூபாய், காக்டா 400 ரூபாய், செண்டு 105 ரூபாய் கணகாம்பரம் 980 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.