திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள புத்தன் கோட்டகம் கிராமத்தில் இன்று மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மூங்கில் கொள்ளைக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மூங்கில் கொள்ளையில் எரிந்துகொண்டிருந்த தீ அருகில் இருந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டின் பின் பக்கம் இருந்த வைக்கோல் போரில் பற்றியது.
மேலும் வைக்கோல் மீது பற்றி எரிந்த தீ அருகே மாடியின் மேல் இருந்த கூரை வீட்டின் மீது பரவி மளமளவென எரியத்தொடங்கியது.
இந்நிலையில் அருகில் இருந்த இளைஞர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும் பெகவாழ்ந்தான் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் வைக்கோல் போர் மற்றும் வீட்டின் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து பெகவாழ்ந்தான் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்குவது?'