இன்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 80ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். 6 முறை தேசிய விருதுகளையும், இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பாரதிராஜா பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்கள் என அடையாளப்படுத்தப்படும் இயக்குநர்கள்,பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர்கள்.
கார்த்திக், சுதாகர், ராதிகா, ராதா, ரேவதி போன்ற எண்ணற்ற திரையுலக நட்சத்திரங்களை வெள்ளித் திரைவானில் அறிமுகப்படுத்தி வைத்தார் என்ற பெருமையும் அவரையே சேரும்.