அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (90). இவருக்கு தனபாக்கியம், பஞ்சவர்ணம் என இரண்டு மனைவிகள். இதில், மூத்த தாரமான தனபாக்கியதிற்குப் பிறந்த மூத்த மகன் முன்பே இறந்துவிட்டார்.
இந்நிலையில் இன்று (ஜூலை20) அதிகாலை இரண்டாம் மனைவி பஞ்சவர்ணம் தூங்கியெழுந்து வந்து பார்க்கையில் சாமிதுரை கழுத்து, வாயில் வெட்டுபட்டு இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சாமிதுரை தனது சொத்தை இரண்டாம் தாரத்தின் மகனுக்கு எழுதி வைத்ததால் முதல் தாரத்தின் மற்ற பிள்ளைகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதால், சாமிதுரை தனது சொத்தை மூன்றாக பிரிக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் துறையினர் மூத்த தாரத்தின் இளைய மகன் தர்மராஜ் அவரது மகன் குஞ்சிதபாதம், இரண்டாம் தாரத்தின் மகன் தங்கமணி ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சீட்டுப் பணம் செலுத்தாத பெண்ணிற்கு அரிவாள் வெட்டு!