கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுப்பன்றிகளிடமிருந்து வேளாண் நிலத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தினர் ஒற்றைக்காலில் நின்று மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு. பழனிசாமி, "மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான காட்டுப் பன்றிகளால் வேளாண்மை நிலமும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்கிட வேண்டும்.
காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகள் முற்படும்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. அப்படி உயிரிழந்தால் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். எங்களுக்கு அரசு உதவாவிட்டால் மிகப்பெரும் கொந்தளிப்பை விவசாயிகள் மத்தில் ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.