திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை அவினாசிபாளையம்புதூர் கிராமத்தில் தேங்காய் தொட்டிகளை எரித்து கார்பன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையால் இப்பகுதி மக்கள் காற்று மாசு, தண்ணீர் மாசால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரித்துகள்கள், கரும்புகை விவசாய நிலங்களில் படர்வதால் விவசாய பயிர்களும், கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கிராம மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், தமிழ்மாடு அரசை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தில் நடந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தகுந்த இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர்.