பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில், மின்சார திருத்தச் சட்ட வரைவு, அத்தியாவசிய பொருள்கள் அவசர திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விலை உத்திரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.