விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரத்தின் விலை 58 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில், உரம் விலையேற்றத்தைத் திரும்ப பெறவேண்டும், விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கிடைத்திட மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.