ETV Bharat / briefs

உலகக் கோப்பைக்காக 20 கிலோ கேக்! - உலகக் கோப்பைக்காக 20 கிலோ கேக்!

உலகக் கோப்பை ஒருநாள்  கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்று உலகக் கோப்பை வடிவில் 20 கிலோவிலான கேக்கை தயார் செய்துள்ளது.

உலகக் கோப்பைக்காக 20 கிலோ கேக்!
author img

By

Published : May 30, 2019, 1:39 PM IST

கிரிக்கெட் திருவிழா என ரசிகர்களால் கொண்டாடப்படும், 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தொடரை கொண்டாடும் விதமாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பேக்கரி ஒன்று உலகக் கோப்பை கேக் ஒன்றை தயார் செய்துள்ளது. பெல்ஜியன் சாக்லெட்டைக் கொண்டு 20 கிலோவிலான பிரத்யேக கேக் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த கேக்கை தயார் செய்ய மூன்று நாட்கள் ஆனதாக, அந்த பேக்கிரியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அந்த கேக்கில், பிசிசிஐயின் லோகோவும், அதன் பக்கத்தில் இந்திய வீரர்கள் அமர்ந்திருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் தயாரித்த இந்த கேக் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.