ETV Bharat / briefs

படித்ததோ 10ஆம் வகுப்பு; பார்த்ததோ டாக்டர் வேலை...! - போலி பெண் மருத்துவர்

மதுரை: 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fake female doctor arrested in Madurai
Fake female doctor arrested in Madurai
author img

By

Published : Sep 27, 2020, 6:01 PM IST

மதுரை மாவட்டம், கீரைத்துறை இருளப்பன் கோயில் தெருவில் உள்ள குலலா மணியம்மாள் காம்பவுண்ட் பகுதியில் வசிக்கும் பாக்கியம் என்பவரின் மனைவி பரிமளா (53) என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

சந்தேகத்தின் பெயரில் கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீரைத்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பரிமளா 10ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டிற்குள் பல்வேறு வகையான ஆங்கில மருந்துகளை வாங்கிவைத்து, பொதுமக்களிடம் தான் ஆங்கில மருத்துவம் பயின்றவர் போன்று போலியாக பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் பரிமளா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.