ETV Bharat / briefs

இரண்டு மருத்துவமனைகளில் சிறப்பு கரோனா வார்டு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Thiruvarur district collector

திருவாரூர்: நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரண்டு அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகள் திறக்க மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்

Corona special ward
Corona special ward
author img

By

Published : Jun 19, 2020, 8:18 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவருவதால் ஏராளமானோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 178 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 101 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து, திருவாரூர் மாவட்டத்திலிருந்து சென்னை சென்று பணிபுரிபவர்கள் பலர் தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் ஏற்கனவே நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனையடுத்து கரோனா தொற்று தாக்குதல் தொடர்ந்து அதிகமாகி வருவதால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக மேலும் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் திறக்க மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இன்று(ஜூன் 19) மட்டும் நான்கு பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் கரோனா வார்டுக்கென சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை என கரோனா தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.