உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன், பெயர்ஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோர் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, கேப்டன் மோர்கன் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். 71 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 17 சிக்சர்கள் என 148 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்களைக் குவித்தது.
-
Wow.
— ICC (@ICC) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
England end up on 397/6, hitting 25 sixes in the process – the most EVER scored by a team in an ODI.
Phenomenal hitting.#CWC19 | #ENGvAFG pic.twitter.com/Ty9y7YI1Tu
">Wow.
— ICC (@ICC) June 18, 2019
England end up on 397/6, hitting 25 sixes in the process – the most EVER scored by a team in an ODI.
Phenomenal hitting.#CWC19 | #ENGvAFG pic.twitter.com/Ty9y7YI1TuWow.
— ICC (@ICC) June 18, 2019
England end up on 397/6, hitting 25 sixes in the process – the most EVER scored by a team in an ODI.
Phenomenal hitting.#CWC19 | #ENGvAFG pic.twitter.com/Ty9y7YI1Tu
இதன் மூலம், மோர்கன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதைத்தவிர, இந்தத் தொடரில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்துள்ளது. மோர்கனைத் தவிர இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பெயர்ஸ்டோவ் 90, ஜோ ரூட் 88 ரன்களை விளாசினார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக 21 பவுண்டரிகள், 25 சிக்சர்களை விளாசினார்.
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் தவ்லாத் சட்ரான், குல்பதீன் நைப் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் ஓன்பது ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 110 ரன்களை வாரிவழங்கியுள்ளார்.