சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா விமானம் 172 பயணிகளுடன் இன்று (ஏப்.22) மாலை 5.18 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டது.
ஒரு மணி நேரம் வானில் பறந்த நிலையில் எஞ்சின் பழுதானது. இதனையறிந்த விமானி உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக 6.20 மணிக்குத் தரை இறக்கினார்.
விமானம் தரையிறங்கும்போது பாதுகாப்பு உபகரணங்கள் தீயணைப்பு வாகனங்கள், அவசர ஊர்தி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாகத் தரை இறக்கினார்.
விமானி உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து, விமானத்தை பத்திரமாகத் தரை இறக்கியதால் 172 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்போடு விமான நிலைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில், தற்போது அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.