ETV Bharat / briefs

ஆரல்வாய்மொழி, போலி இபாஸ் எட்டு பேர் கைது!

author img

By

Published : Jul 10, 2020, 12:53 AM IST

கன்னியாகுமரி: கேரளா மாநிலம் செல்ல வேண்டும் என போலி முகவரி கொடுத்து இ பாஸ் பெற்று சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட டிம்போ டிராவலர் வாகனம்

சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு, மேக்காமண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எட்டு பேர், சென்னையிலிருந்து கேரளா மாநிலம் செல்வதாக கூறி போலி முகவரி மூலமாக இபாஸ் எடுத்து மாவட்டத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.

இவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சிக்கினார்கள். இவர்களிடம் சென்னையிலிருந்து வாகனத்தில் அழைத்து வர ஒரு நபருக்கு ஆறாயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து இ பாஸ் எடுத்து கொடுத்து அழைத்து வந்த சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ்( 37) என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மேலும் டிம்போ டிராவலர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தில் வந்த 8 பயணிகளும் கரோனா பரிசோதனைக்காக கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஊனமுற்ற மகளின் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் தந்தை - உதவி கேட்டு அரசிடம் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.