ETV Bharat / briefs

சட்டத்திற்கு புறம்பாக பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் தனியார் பள்ளி: கல்வி அலுவலர் ஆய்வு! - Education Officer Indirani Inspected Private School In Madurai

மதுரை: தனியார் பள்ளியில் சட்டத்திற்கு புறம்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு வைக்கப்பட்டதா? என்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Education Officer Indirani Inspected Private School In Madurai

author img

By

Published : Jun 22, 2020, 6:03 PM IST

கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாகவும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தற்போது சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் முறையாக இல்லாமல் இருப்பதால் மாணவர்களின் மதிப்பெண்ணை அதிகப்படுத்தி பள்ளிகளின் மேம்படுத்துவதற்காக முயற்சிகளை தனியார் பள்ளிகள் எடுத்து வருகின்றன.

இதற்காக மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து கட்டாயமாக தேர்வு எழுத வைக்கும் நடைமுறைகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமையும், இன்றும் மாணவர்களை கட்டாயமாக அழைத்து வந்து தேர்வுகள் எழுத வைப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி அப்பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் விசாரணையில், மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயமாக அழைத்து வந்து தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தினந்தோறும் 18,000 கரோனா சோதனைகள்' -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.