ETV Bharat / briefs

பொள்ளாச்சி பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்! - Pollachi Drainage Project Meeting

கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து துணை சபாநாயகர் ஜெயராமன் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

dupety speaker jayaraman municiplity meeting in pollachi

author img

By

Published : Jul 23, 2020, 5:37 AM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் ரூ 170 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப்பணிகளில் தாமதம் ஏற்படுவதை அடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது துணை சபாநாயகர் ஜெயராமன் ஒப்பந்தகாரர்கள், அரசு அதிலுவலர்களிடம் பேசுகையில், " மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொள்ளாச்சி மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கபட்டது இந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகள்.

கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற பணி முழுமையாக முடிவு அடையவில்லை. திருநீலகண்டர் வீதி, வெங்கட்ராமன் வீதி, நேதாஜி ரோடு, காந்தி சிலை ரோடு என சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளின் பணி முடியாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் காந்தி ராஜன், அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரியலூரில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு - ஒரே நாளில் 26 பேர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.