கரோனா தொற்று சென்னையில் வேகமாகப் பரவிவரும் சூழலில் சென்னை மாநகராட்சியிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளது.
இதனால், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களை காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட எல்லையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது இ-பாஸ், உரிய ஆவணங்கள் இல்லாத இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மேலும் குடும்பமாக வரும் வாகனங்களை காவல் துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பிவருகின்றனர். சரக்கு வாகனங்களுக்குத் தனிப்பாதை அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவருகின்றன. உரிய ஆவணங்கள் இன்றி காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் யாரும் வர வேண்டாம் என அம்மாவட்ட டிஎஸ்பி கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு குறித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு... தளர்வுகள் என்னென்ன?