ETV Bharat / briefs

முறையான அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் - அப்புறப்படுத்திய மாநகராட்சி அலுவலர்கள்! - Tiruppur district News

திருப்பூர் : தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முறையான அனுமதியின்றி சாலையோரமாக செயல்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர்.

  Disposal of roadside shops in Tiruppur
Disposal of roadside shops in Tiruppur
author img

By

Published : Jun 24, 2020, 7:51 PM IST

திருப்பூர் மாவட்டத்தில், 120 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நான்கு பேர் மட்டும் தற்பொழுது சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் - ராம்நகர் பகுதியில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான குழு, அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.

மேலும் வியாபாரிகளும் முகக்கவசம் அணியாமலும் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சாலையோரமாக செயல்பட்டு கொண்டிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட கடைகள் முறையான அனுமதி பெறாமல், விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்த அனைத்து கடையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.