தெலுங்கு மொழியில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ்ப்பட ரீமேக்கான வர்மாவை முதலில் இயக்குநர் பாலா இயக்கினார். இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், மேகா சௌத்ரி, ரைசா வில்சன் ஆகியோர் நடித்தனர். படம் முழுவதுமாக இயக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவில்லை என தயாரிப்பாளர் தரப்புக்கு அதிருப்தி எழுந்தது.
இதனையடுத்து பாலா, ’வர்மா’ படத்திலிருந்து நீக்கப்பட்டார். பிறகு படத்தை புதுமுக இயக்குநர் கிரிசாயா ஆதித்யா, அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை இயக்கி வருகிறார். துருவ் விக்ரமை தவிர அனைவரும் படத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
இப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில் வர்மா படக்காட்சிகளை இப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என இயக்குநர் பாலா நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.