ETV Bharat / briefs

விளைநில‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தும் யானைகள்: விவசாயிகள் கவலை - திண்டுக்கல் யானை பிரச்னை

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் விளைநில‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தும் காட்டு யானைகளை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விர‌ட்ட விவ‌சாயிக‌ள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Elephants
Elephants
author img

By

Published : Sep 19, 2020, 4:08 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பார‌தி அண்ணாந‌க‌ர், புலியூர், பேத்துப்பாறை, கேசி.பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட ப‌ல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு வேளாண்மையே பிரதான தொழிலாக இருக்கின்றது. இப்பகுதியில் அவரை, பலா, வாழை, காபி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வேளாண்மை செய்யப்படுகின்றன.

தற்போது இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் ஒரு ஏக்க‌ருக்கும் அதிகமான பயிர்கள் சேத‌மடைந்துள்ளதால் விவ‌சாயிக‌ள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து விளைநிலங்களுக்குள் யானை வராமல் தடுக்க அமைக்கப்பட்ட வேலிகளையும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் இர‌வு மட்டுமின்றி ப‌க‌ல் நேர‌ங்க‌ளில் குடியிருப்புப் ப‌குதிக்குள் யானை கூட்ட‌ங்க‌ளாக‌ வ‌ந்து அச்சுறுத்திவ‌ருவ‌தால் பொதும‌க்க‌ள் ப‌ய‌த்துடன் வசித்துவ‌ருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே யானை கூட்ட‌ங்க‌ளை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விர‌ட்ட‌ வேண்டும் எனப் பொதும‌க்க‌ளுடன் விவ‌சாயிக‌ள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.