உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 11ஆவது லீக் போட்டி இன்று பிரிஸ்டோல் நகரில் நடைபெறவிருந்தது.
இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்தால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஒரு பந்துக் கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்தானதால், இந்தப் போட்டியை காண வந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி மூன்று புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.