ETV Bharat / briefs

பாக்.க்கு எதிரான வரலாற்றைத் தக்க வைக்குமா இந்தியா? உலகக்கோப்பை அலசல்! - உலகக் கோப்பை

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா தன் வரலாற்றைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

இந்தியா - பாக் மோதல்
author img

By

Published : Jun 15, 2019, 11:57 PM IST

கிரிக்கெட் திருவிழா என்று கொண்டாப்படும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பொதுவாக, மழை வந்தால் ஃபீவர் வருவது வழக்கம்தான். ஆனால் மழையால் இம்முறை தொடரின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஃபீவர் குறைந்துகொண்டே இருக்கிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதனால், தொடரின் மீது குறைந்துள்ள ஃபீவர் தற்போது ஹய் டெம்பரேச்சரை எட்டும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

அரசியல், விளையாட்டு என எப்படி பார்த்தாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆட்டம் சூடுபிடிப்பது வழக்கம். அதிலும், உலகக்கோப்பை தொடர் என்றால் சொல்லவே வேண்டாம்... போட்டி இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்!

Ind vs Pak
1992 உலகக் கோப்பை

ஆஷஸ் டெஸ்ட் தொடரை விடவும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் அதிகம் பேசப்படும், பார்க்கப்படும் போட்டியாக இருந்துவருகிறது. அந்த அளவிற்கு போட்டியிலும் ஏகப்பட்ட ட்விஸ்ட், ஹார்ட் பிரேக்கிங் மொமன்ட்ஸ் என ரசிகர்களின் பிபி அதிகரிக்கும் வகையில், இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இதுவரை இவ்விரு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் 131 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா 54 போட்டிகளிலும், பாகிஸ்தான் 71 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், உலகக்கோப்பை தொடரில், இந்தியாவை பாகிஸ்தான் அணியால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களது யுத்தமானது 1992 உலகக்கோப்பை தொடங்கி 1996, 1999, 2003, 2011, 2015 என ஆறுமுறை உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகள் மோதியுள்ளன. இந்த ஆறுமுறையும் இந்தியாவின் கைதான் ஓங்கியுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நடைபெற்ற ஸ்லெட்ஜிங், மறக்க முடியாத தருணங்கள் குறித்து தனி வீடியோ ஒன்றைதான் வெளியிட வேண்டும்.

Ind vs Pak
2011 பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி

இதனால், நாளை நடைபெறவுள்ள போட்டியிலும் இந்தியாவின் கை ஏழாவது முறையாக ஓங்குமா.. முகமது அசாருதீன் முதல் தோனி வரையிலான கேப்டன்ஷிப்பில், பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது கோலியின் கேப்டன்ஷிப்பிலும் வெற்றியை தொடருமா என்பதுதான் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது ஒருபக்கம் இருந்தாலும், இம்முறையாவாது இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தாதா... பட்டாசை வெடித்து தீபாவளியை கொண்டாடமாட்டோமா? என்ற ஏக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் 1992இல் இருந்து தற்போதுவரை காத்திருக்கிறார்கள். இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஆப்ரிடி, மிஸ்பா உல்ஹக் வரிசையில் எங்கே தானும் இணைந்துவிடக்கூடாது என்ற முனைப்பில், சர்ஃப்ராஸ் கான் உள்ளார்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய நான்கு போட்டிகளில், ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என மூன்று புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் பரிதாபமான நிலையில் உள்ளது.

மறுமுனையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில், இரண்டு வெற்றி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதனால், ஐந்து புள்ளிகளுடன் இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது. இதனால், நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற கடுமையாக போராடுவார்கள் என்பதால், போட்டி நிச்சயம் அனல் பறக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தற்போது ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு மழையில்லாமல், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்பதுதான்... வரலாற்றைத் தக்க வைக்குமா இந்தியா? வரலாற்றைப் படைக்குமா பாகிஸ்தான்... காத்திருப்போம்!

Intro:Body:

CWC19 - Ind vs Pak Preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.