புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதைய நிலவரப்படி புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 13 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 10 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகமாக தொற்று கண்டறியப்பட்டுள்ள புதுச்சேரியின் 32 பகுதிகளில், வரும் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.