ETV Bharat / briefs

டாஸ் வென்ற 'தல' தோனி! சிஎஸ்கேவின் சுழலை சமாளிக்குமா டெல்லி - CSK

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

IPL Qualifier 2: டாஸில் வெற்றிபெற்ற சென்னை... போட்டியில் வெற்றிபெறுமா?
author img

By

Published : May 10, 2019, 7:18 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். சென்னை அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், டெல்லி அணி கடந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய அதே 11 வீரர்களுடனே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிச் சுற்றில் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது. சென்னையை வீழ்த்தி டெல்லி அணி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா அல்லது சென்னை அணி எட்டாவது முறையாக இறுதிச் சுற்றில் காலடி எடுத்துவைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை அணி விவரம்: தோனி (கேப்டன்), வாட்சன், ரெய்னா, டு பிளசிஸ், ராயுடு, ஜடேஜா, பிரவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர்

டெல்லி அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், காலின் முன்ரோ, ரூதர்ஃபோர்டு, கீமோ பவுல், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் போல்ட்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.