திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நான்கு நாள்களாக மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் மணப்பாறை ராஜிவ்நகர், புத்தாநத்தம் மற்றும் ராயம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இன்று புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவர்கள் இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பிட்ட அந்த பகுதிகளுக்கு தினமும் கிருமிநாசினி தெளித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து, புத்தாநத்தம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.