தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று மட்டும் எப்போதும் இல்லாத அளவில் 1,493 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 243 பேரும், தேனாம்பேட்டையில் 182 பேரும், கோடம்பாக்கதில் 156 பேரும், தண்டையார்பேட்டையில் 153 பேரும், ராயபுரத்தில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை பார்க்கலாம்.
வ.எண் | பகுதிகள் | பாதிப்பு |
01 | ராயபுரம் | 6288 |
02 | தண்டையார்பேட்டை | 5116 |
03 | தேனாம்பேட்டை | 4967 |
04 | கோடம்பாக்கம் | 4485 |
05 | அண்ணா நகர் | 4385 |
06 | திரு.வி.க. நகர் | 3532 |
07 | அடையாறு | 2435 |
08 | வளசரவாக்கம் | 1719 |
09 | திருவொற்றியூர் | 1545 |
10 | அம்பத்தூர் | 1519 |
11 | மாதவரம் | 1135 |
12 | ஆலந்தூர் | 880 |
13 | பெருங்குடி | 854 |
14 | சோழிங்கநல்லூர் | 775 |
15 | மணலி | 581 |
இவ்வாறு சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் 41 ஆயிரத்து 172 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 ஆயிரத்து 887 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி!