கரோனா வைரஸ் சென்னையில் அதிவேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் வீட்டையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதன்படி, சென்னையில் ஏற்கனவே 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 369ஆக அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவ்விவரம் பின்வருமாறு:
1.திருவொற்றியூர்- 14
2.மணலி- 9
3.மாதாவரம்- 20
4.தண்டையார்பேட்டை- 8
5.ராயபுரம் - 78
6.திரு.வி.க.நகர்- 53
7.அம்பத்தூர்- 27
8.அண்ணா நகர்- 4
9.தேனாம்பேட்டை- 10
10.கோடம்பாக்கம் - 73
11.வளசரவாக்கம்- 1
12.ஆலந்தூர்- 7
13.அடையார்- 13
14.பெருங்குடி- 26
15.சோழிங்கநல்லூர் - 25
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 369ஆக உயர்வு - சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 369 ஆக உயர்வு
சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 360இல் இருந்து 369ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.