மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 'மதுரை மாவட்டத்தில் 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.