தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. ஒருபுறம் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், மற்றொரு புறம் அதிக நபர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கோவை, சிங்காநல்லூரில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கர்ப்பிணிகள் இருவர், அரசு மருத்துவமனையில் தொண்டை புற்று நோய் அறுவை சிகிச்சை செய்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர் உள்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்தமாக இன்று வரை 309 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இதுவரை ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் - காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்