சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதனிடையே, காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் கரோனா பரவலை தடுக்க கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பட்டாபிராம் சரக காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மேலும், உதவி ஆணையர் வெங்கடேஷனுடன் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.