பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.16) 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 938 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 205 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற்னர்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வசித்து வந்த சபேதர் (73) என்பவரும், கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சம்மந்தம் (53) என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.