டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர், சென்னையில் இருந்து வாகனம் மூலம் வந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் இருவருக்கு இன்று கரோனா உறுதியானது. இதையடுத்து, இருவரும் சிங்காநல்லூர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று (ஜூன் 11) வரை 43 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மேலும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரை பொறுத்தவரை 45 பேர் ஈஎஸ்ஐ மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திருவாரூரில் குடிமராமத்துப் பணிகள் 80 விழுக்காடு நிறைவு!