சேலம் மாவட்டத்தில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இன்று (செப்.1) 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் 335 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதியாகி உள்ளது.
அதில், சேலம் மாநகரில் மட்டும் 191, காடையம்பட்டி 2, கொளத்தூர் 3, மகுடஞ்சாவடி 14, மேச்சேரி 4, மேட்டூர் நகராட்சி 5, நங்கவள்ளி 6, ஓமலூர் 8, சங்ககிரி 5, தாரமங்கலம் 15, வீரபாண்டி 12, ஆத்தூர் 7, ஆத்தூர் நகராட்சி 7, அயோத்தியாப்பட்டணம் 4, கெங்கவல்லி 20, நரசிங்கபுரம் 2, பனமரத்துப்பட்டி 4, பெத்தநாயக்கன்பாளையம் 2, தலைவாசல் 8 என மொத்தம் 324 பேருக்கு கரோனா பாதித்துள்ளது.
பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த மூன்று பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 412 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஏழாயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் மூன்றாயிரத்து 529 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல், சிகிச்சைப் பலனின்றி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.