ETV Bharat / briefs

திருப்பூரில் ஒப்பந்தப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! - ஒப்பந்தப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

திருப்பூர்: இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Contract workers strike in Tiruppur
Contract workers strike in Tiruppur
author img

By

Published : Aug 25, 2020, 6:56 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் தூய்மைப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிவரும் அவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று நல்லூர் மண்டல அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறுகையில், "ஏழு வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றாத சூழ்நிலையில் தற்போது சிறப்பு ஊதியம் கூட தங்களுக்கு அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அதேபோல், இரண்டு மாதமாக ஊதியம் வழங்காததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் தங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை" என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், அலுவலர்கள் உரிய தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.