புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "எந்த தலைவர்களையும் பேரவையில் அவமதித்து பேசக்கூடாது என்றும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்குமாறு கேட்க அதிமுகவிற்கு உரிமையுள்ளது. ஆனால் கலைஞர் கருணாநிதி பெயரில் அறிவித்த சிற்றுண்டி திட்டம் குறித்து அதிமுக விமர்சிக்கக்கூடாது" என்றார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த பின்பு அவருக்கு சமாதிக்குக்கூட அனுமதி வழங்க அதிமுக மறுத்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு கருணாநிதிக்கு கெளரவம் கொடுத்துள்ளது என்று ஆவேசத்துடன் பேசினார்.
இதனால், அதிமுக உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, கருணாநிதி குறித்து தரக்குறைவாக எந்த வார்த்தையும் நாங்கள் பேசவில்லை. இது குறித்து அவர்கள் பேசுவது சரியில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் வெளிநடப்பு செய்தோம்" எனத் தெரிவித்தனர்.