ETV Bharat / briefs

வேப்பூர் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

பெரம்பலூர்: வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Collector who inspected the development project works in Veppur Union

author img

By

Published : Sep 3, 2020, 5:03 PM IST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பள்ளி கட்டடங்கள் மேம்படுத்த திட்டம், தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், மூலதன நிதி திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, உள்ளாட்சி துறை மூலம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஓதியம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 32.04 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியும் ரூ. 19.72 லட்சம் மதிப்பீட்டில் கிராம பஞ்சாயத்து அலுவலகமும் லட்சுமிபுரம் கிராமத்தில் ரூ. 10.72 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் சாந்தா ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன் கிணற்றின் சுற்றுச் சுவர் பணியை விரைந்து முடிக்கவும், கிணற்றின் சுற்றுப்புறங்களை சமமாகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், சுற்றுப்புறங்களில் தேங்கும் நீரின் அருகிலுள்ள ஓடைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.