ETV Bharat / briefs

ஹாங்காங் போராட்டத்தை ஒடுக்க சீனாவின் கருப்புச் சட்டம் வருகிறது!

author img

By

Published : Jul 2, 2020, 7:33 PM IST

ஹாங்காங் : தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது ஹாங்காங் போராட்டத்தை ஒடுக்க சீன அரசு கொண்டுவரும் கருப்புச் சட்டம் என்று ஜனநாயக சார்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் போராட்டத்தை ஒடுக்க சீனா கருப்புச்சட்டம் வருகிறது!

அரை தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக கருதப்படும் ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சீனாவில் நடத்த அனுமதிக்கும் கைதிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. சீனாவின் நெருக்கடியால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாக லட்சக்கணக்கான ஹாங்காங் மக்கள் பல மாதங்கள் சீன அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை சீன அரசு ஜூன் 30ஆம் தேதி அதன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஹாங்காங்கின் அரை தன்னாட்சி அதிகாரமும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஹாங்காங்கின் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது, இந்த புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தை ஒடுக்க சீனா தனது படையை அங்கு களமிறக்கியுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக சார்பு சட்டப்பேரவை உறுப்பினர் கிளாடியா மோ கூறுகையில், "புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் எதிரானது. ஹாங்காங்கில் மக்களுக்கு வருங்காலத்தில் சுதந்திரம் என்ற ஒன்று இருக்குமா என்றே தெரியவில்லை.

ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியதாக கருதப்படுவோர், எவ்வித ஆதாரங்கள் விசாரணை எதுவும் இல்லாமல் ஆயுள் தண்டனையை அனுபவிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது" என தெரிவித்தார்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.