ETV Bharat / briefs

ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய சென்னை அணி - ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100 வெற்றிகளை பதிவுசெய்த இரண்டாவது அணி என்ற சாதனையை சென்னை அணி படைத்துள்ளது.

CSK
author img

By

Published : May 11, 2019, 7:44 AM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.

இதில், பவுலிங், பேட்டிங் என சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இச்சாதனையை சென்னை அணி தனது 161ஆவது ஐபிஎல் போட்டியில் எட்டியது.

chennai-super-king
ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய சென்னை அணி

முன்னதாக இச்சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் படைத்திருந்தது. மும்பை அணி 175ஆவது போட்டியில்தான் தனது 100ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தச் சாதனையை மும்பை அணி எட்டுவதற்கு சென்னை அணியைக் காட்டிலும் 14 ஆட்டங்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், நாளை மறுநாள் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில், பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.