ETV Bharat / briefs

சென்னையில் இட நெருக்கடி அதிகம் ஆதலால் கரோனா அதிகம் - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னையில் இட நெருக்கடி அதிகம்

சென்னை : இட நெருக்கடி சென்னையில் அதிகம் என்பதால்தான் கரோனா பாதிப்பும் அதிகமாக உள்ளது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Jun 16, 2020, 4:28 PM IST

சென்னை, ராயபுரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் இரண்டாயிரம் ஏழை, எளியோருக்கு மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய். கரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் 38 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு குறையும் இல்லாமல் மாநில அரசு முறையாக சிகிச்சை அளித்து வருகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் நெருக்கடி அதிகமாக இருப்பதால் பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இதில் சமூகப் பரவல் என்பது இல்லை, மேலும் இனி வரும் காலங்களில் சமூகப் பரவல் வந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைகளின்படி சில கட்டுப்பாடுகள் சென்னையில் விதிக்கப்பட்டுள்ளன.

மரணங்கள் குறித்து மறைப்பதற்கு ஒன்றுமில்லை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தார்கள் என்றால் அது எல்லோருக்கும் தெரிந்து விடும். இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

மீன்வளத்துறை மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்
மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தேவை இல்லை. இதில் எதிர்க் கட்சிகள் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? மருத்துவர்களின் அறிவுரைப்படி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதில் எதிர்க் கட்சிகளை கூட்டி ஆலோசனை செய்வதில் என்ன தேவை இருக்கிறது?". எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறாதது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் அவருக்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் எந்த தவறும் இல்லை” என்றும் பதிலளித்தார்.

இதையும் படிங்க : மீண்டும் பொதுமுடக்கம்: மீளுமா தமிழ்நாட்டின் தலைநகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.