ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டதால், தமிழ்நாடு அரசு சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.
அதன்படி, நாளை (16 ஜூன்) அன்று செங்கல்பட்டிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் ரயில் தற்போது சிதம்பரத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06795/06796 செங்கல்பட்டிலிருந்து திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளியில் இருந்து செங்கல்பட்டு என சிறப்பு ரயில் நாளை இயங்குகிறது.
நேற்று (ஜூன் 14) வரையிலும் சிதம்பரத்தில் நின்று செல்லாது என அறிவித்த தெற்கு ரயில்வே இன்று (ஜூன் 15) தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், சிதம்பரத்தில் நின்று செல்லும் என புதிய அறிவிப்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டில் மதியம் மூன்று மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். மீண்டும் திருச்சிராப்பள்ளியில் காலை ஆறு மணிக்கு புறப்படும் ரயிலானது மதியம் 12:45 மணியளவில் செங்கல்பட்டு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.