திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய காவல் துறை துணைத்தலைவராக(DIG) சாமுண்டீஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து, தற்போது பதவி உயர்வு பெற்று காவல் துறை துணைத்தலைவராக(DIG) பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பதவி ஏற்றிருக்கும் காவல் துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி, பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் குற்றச்செயல்களான மணல் திருட்டு போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால், அவர்களை பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாக எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். மேலும் தெரிவிக்கும் நபர் முகவரி அனைத்தும் பாதுகாக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து 7397001493, 7397001398 ஆகிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள் மூலம், உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று உறுதிபட காவல் துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.